Tuesday, 28 June 2016

எப்படி வாழ்வது என்று கேட்காதே

பிடிக்காத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கேட்காதே .....!!!


தாமரையைப் பார் ஒட்டாத நீரோடு அது எப்படி ஒட்டி வாழ்கிறது என்று!!!....


தமிழன்டா!

காளைகள் மனிதரின் வாழ்வியலில் ஒரு முக்கிய பங்கு!

விஞ்ஞானத்த சொல்லிக்கொடுத்ததே தமிழன்டா!



டக்கரு டக்கரு

இது காவியம் பேசும் ‪#‎காதல்‬ கதை அல்ல!
களம்கண்ட எங்கள் ‪#‎காளை‬-களின் கதை!

மீசையதான் முறுக்கி வந்தா போதும்..
எதிரி கூட்டம் கொலைநடுங்கி ஒடும்...

ஏய் டக்கரு டக்கரு இது தான் ஊரு ! 
‪#‎டக்கரு_டக்கரு‬ நீ மோதி பாரு . .

நீ மொறைச்சா நாங்க மொறைப்போம்...
நீ அடிச்சா நாங்க அடிப்போம்....

மாட்டை பெத்த புள்ளையா நினைக்கிறோம் ...... நினைக்கிறோம்.....

இத கொடுமை செய்ய எப்படி மனசு வரும் ..... மனசு வரும்.......

இதற்கு பின்னே சர்வதேச அரசியல் வியாபாரம் திக்காக நடந்திட வெறிச்செயல்......

இந்த விளையாட்டை தடை செய்தால் நாட்டு மாடு அழியும்....
வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்.....

அறியாத தமிழா , உன் அறியாமை பிழையினால் , உன் அடையாளம் இழந்தால் , நீ மெதுவாக அழிவாய் , உன் அடையாளம் இழந்தால் , உன் தாய்நாட்டில் நீயும் ஒரு அகதியாய் மாறிடுவாய்......

இது மாட்டை பத்தின பிரச்சினை இல்ல....
உன் நாட்டை பத்தின பிரச்சினை டா ....

நாட்டின் பொருளதாரமே வீழும்.... நீயும் எடுக்கனும் ‪#‎பிச்சையா‬ டா

ஒட்டு மொத்த தமிழினத்திற்காக இந்த படைப்பை உருவாக்கிய சகோதரர் Hiphop Tamizha அவர்களுக்கு நன்றி..

தடை என்பது முடிவல்ல - துவக்கம்
ஒலிக்கட்டும் நம் உரிமை முழக்கம்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த வழி என்ன ?


போனவருடம் எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்தி முடிக்க தீர்மானித்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்தோம். திட்டமிட்டபடி மதுரையில் நடத்த முகாமிட்டுருந்தோம். காலையில் அண்ணன் தங்கி இருந்த விடுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த சென்றபோது இடைமறித்து காவல்துறை கைது செய்தது. சரி ஒருபக்கம் கைது இருக்கட்டும் மறுபக்கம் காளையை அடைத்துவிடும் என காளை வைத்து இருப்போரை அனுக அவர்கள் காவல்துறைக்கு பயந்து எங்களோடு ஒத்துழைக்கவில்லை.

அன்றே நானும் கரூர் மண்டல செயலாளர் ரமேஷ் ( Ramesh Ramesh )அவர்களும் முடிவு செய்து காளையை நாமே வாங்கி வளர்ப்போம். அந்த காளைகள் வீரத்தமிழர் முன்னணி சார்பாக வளரும். வரும் தைப்பொங்கலில் நமது காளைகளை நாமே வளர்த்து வாடிவாசல் அமைத்து திறப்போம் என்று. அதன்படி இன்னும் ஒருவாரத்திற்குள் இருவரும் 3 காளைகளை வாங்கி வீரத்தமிழர் முன்னணி சார்பாக திட்டமிட்டு உள்ளோம்.

ஜல்லிக்கட்டுக்கு தயார் நிலையில் உள்ள நாட்டு காளைகள் சுமார் 50000 முதல், 100000 ரூபாய் வரை விலை உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு பழக்கப்படாதா காளைகளை 15000 முதல் 50000 ரூபாய் வரை அதன் வயது மற்றும் எடையினை பொறுத்து விலை இருக்கும்.

விருப்ப முடைய உறவுகள் தங்கள் பெயரில் ஒரு காலையினை நீங்களே வாங்கி வளர்க்கலாம். வளர்க்க இயலாத சூழலில் நாங்கள் அமைக்க இருக்கும் "வீரத்தமிழர் முன்னணி காளை பண்ணையத்தில் கொடுத்தால்" நாங்கள் அந்த காளையை வளர்த்து ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்துவோம்.

வரும் தைமாதத்திற்குள் 30 மாடுகள் நமது கைவசம் இருந்தால் எந்த தடை வந்தாலும் ஜல்லிக்கட்டு நடத்தலாம்.

ஹிப்ஹாப் தமிழன் சொன்னது போல "மாடு வச்சுருக்கிறவன் மாட்ட வித்துட்டு டெல்லிக்கு போகக்கூட முடியாது. இந்த நிகையில் எப்படி உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடத்த போறான்" என்பதுதான் எதார்த்தம். இங்க இருக்கிற ஜல்லிக்கட்டு மாநில தலைவர் பொன்னார் சொன்னாரு என்று படுத்துட்டாரு. ஆனா இதே ஆந்திராவில் தடைவிதித்து இருந்த போதும் தான் வளர்த்த 54 மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டை நடத்தி காட்டினான் ஆந்திரா எம்.பி...

எனவே மாடு நம்மவர்கிட்ட இருந்தா போதும். கட்டாயம் ஜல்லிக்கட்டை நடத்தலாம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருக்கு. மாவட்டத்திற்கு ஒரு மட்டை வாங்கி வளர்த்தால் கட்டாயம் வருகின்ற ஆண்டில் ஜல்லிக்கட்டை நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும்.

ygee மகேந்திரன்-க்கு குற்றாவளியை தெரியுமா?


ஒரு கொலை நடந்தால் ஒன்று கொலை செய்யப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கலாம். அல்லது கொலையாளி உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். அல்லது இது போன்ற கொலைகள் இனி நடக்காமல் இருக்க முடிந்ததை செய்யலாம். 

ஆனால் இவை எதையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பகிரங்கமாக ஒரு பொய்யை சொல்லி அதன் மூலம் ஒரு சமுதாயத்தின் மேல் பழியை சுமத்தி மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை வளர்த்து அதில் குளிர்காய நினைப்பது எத்தனை கேவலமான செயல். 

இந்த செயலை வேறு ஒரு அரசியல் கட்சி தலைவர் செய்திருந்தால் இந்நேரம் தமிழக காவல்துறை பொங்கி எழுந்திருந்திருக்கும். 

ஆனால் இவாளெல்லாம் தமிழக முதல்வரோடு அந்த காலத்திலேயே ஒன்றாக நாடகம் போட்ட ஆட்களாச்சே. நெருங்க முடியுமா? 

வீரப்பன் யாருக்கு வில்லாதி வில்லன்!


இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக பெரும்பான்மையோடு நாடாளுமன்றம் சென்றாலும் திராவிட கட்சி தமிழரின் உரிமையை மீட்க உதவாது. 

இந்திய கூட்டாட்சிக்கு உட்பட்ட மாநிலமானாலும் தமிழர் எதிர்ப்பு இனவாத அரசியலை முன்வைத்தே கர்நாடகம் ஆந்திரம் கேரளம் என எல்லா அண்டை மாநிலங்களும் இந்தியத்தால் நகர்த்தப்படுகிறது. 

இந்திய காலனிய ஏகாதிபத்தியம் தேசிய இனங்களின்-உரிமை மறுப்பில் தான் சுரண்டி திழைத்து வளர்கிறது. தமிழர் இனம் தான் வலிமையான சர்வாதிகார எதிர்ப்பை தேசிய இன உரிமையாய் பதிவு செய்திருக்கிறது.

இந்த அரை நூற்றாண்டில் வல்லாதிக்கத்திற்கு எதிராய் மிகவும் கடுமையாக போராடிய இனம் தமிழர் இனம் தான், சிறுபான்மை தமிழர் இனம். ஆம் பெருப்பான்மை தமிழினம் இந்திய மற்றும் திராவிட கருத்தியலாலும் மேலும் மீதமுள்ள மக்கள் அறியாமையாலும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போராடுவதே கடினமான நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், மேலும் அவர்கள் விழித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள மது கொள்கை நுகர்வு பொருளாதார கொள்கை, அந்நிய நேரடி முதலீடு, கார்பரேடில் வேலை வாய்ப்பு என்று அறிவுக்கூலிகளாக்கப்பட்டும் மேல் மட்டம் முதல் அடி மட்டம் வரை அடிமைதனத்தில் வைத்திருக்கும் ஒரு கட்டமைப்பு.. இதனை முன்னின்று செய்வது திராவிட கட்சிகள், பின்னின்று இயக்குவது ஏகாதியபத்திய நாடுகளும் அதன் ஏவலாளான இந்தியாவும். 

இப்படி ஒரு பக்கம் நம் இனம் ஆங்கிலத்தில் மோகம் கொண்டு நம் நாட்டு வளங்களை பொருளாதாரத்தை உரிஞ்சும் அந்நிய முதலாளித்துவ நிறுவனங்களுக்கு சேவை செய்து அதில் பெருமையடைய, நாட்டை அழிக்கும் அழிவு திட்டங்களை முன்னேற்றம் என்று பிதற்ற, 'தமிழர் தான் ஆள வேண்டும் என்பது இனவாதம்' என்று கூறி திராவிட தரகர்களை ஆளவிடுவதும், என்று ஒரு கூட்டம் மந்தைகளை போல் வாழ்ந்தாலும். இதே இனம் இந்திக்கு எதிராய் சுதந்திரத்திற்கு மின்பும் பின்பும் பெரும் போரையே முன்னெடுத்தது!!

இந்த போர் தமிழர் இனத்தின் இருப்பை காட்டியதோடு, ஏனைய தேசிய இனங்களுக்கும் உணர்வூட்டியது, அரசியல் சட்டத்தை மாற்றியமைத்து இந்தி கொள்கையில் தமிழகத்திற்கு தனிசிறப்பு விலக்கு அழித்தது இந்தியா.ஈழத்தில் வல்லாதிக்க கிழக்காசிய நாடுகளை எதிர்த்து தமிழர்கான நாடு அடைந்து, 

தற்சார்பு பொருளாதார, பெண்ணிய, சமத்துவ விடுதலையடைந்து தற்காப்பு போர்புரிந்துகொண்டு ஒரு அரசாங்கத்தை நிறுவி அடிமைப்பட்ட தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாய் விழங்கியது விடுதலை புலிகள் தலைமையிலான தமிழீழம். இப்படியான நம் இனத்தின் நகர்வுகளால் நம்மை கண்கானித்து நமக்கு வலைவிரிக்கப்பட்டது. 

இந்த போர் குணத்தை காத்து இதன் தொடர்சியாய் நம் உரிமைகளை மீட்டவிடாமல், இதன் வழி செல்லவிடாமல் திசைமாற்றியது இரு திராவிட கட்சிகளும் தான். 

நம் பல தலைவர்கள் இந்தியத்தையும் திராவிடத்தையும் அதன் உண்மை தன்மையையும் அன்றே உணர்ந்து இந்திய விடுதலைக்கு முன்பே தனி தமிழ் நாடு கோரினர் தமிழ் தேசியத்தை முன்வைத்தனர். 

திராவிடத்தால் அது இருட்டடிப்பு செய்யப்பட்டது, குறைந்தபட்ச 'தமிழர் பிரதிநிதித்துவம்' 'தமிழ்நாட்டை தமிழ் மண்ணின் மைந்தன் தமிழரே ஆள்வது' என்ற அளவில் கூட விடாமல் திராவிடம் பார்த்துக்கொண்டது. தமிழர் இனத்தின் தேசிய இன உரிமை மீட்பு போராட்டங்களும், தமிழரை பகை இனமாக கருதும் இனத்திடம் நம் ஆட்சி சென்றதால் மேலும் சுலபம் ஆகியது தமிழரை சிதைக்க.

ஒரு பக்கம் அண்டை மாநிலத்தின் இனவாத கழ்ப்புணர்ச்சியால் தமிழர் உரிமை மறுப்பு வஞ்சிப்பு இன்னொரு பக்கம் சொந்த மாநிலத்தின் அயலார் ஆட்சியின் அலட்சியம், 

காலத்தின் கட்டாயமாய் 'தன் ஊர் பெண்களுக்கு நிழந்த கொடுமைகளுக்காய்' , 'தன் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காய்' வீரப்பன் ஆயுதமேந்தினான்.
ஆட்சியைபிடித்து அதிகாரத்தை வைத்திருக்கும் அரசாங்கம் தமிழருக்கான அரசாங்கமாக இல்லாததால் தன் துப்பாக்கி முனையில் நிபந்தனைகளை வைத்தான், இரு மாநில அரசாங்கத்தையும் அடிபணியவைத்தான். 

திராவிட அரசு பதறியது!
கர்நாடகமோ கதிகலங்கியது!!
இப்படி ஒடுக்கப்படும் இனத்தில் அவதரிக்கும், அநீதியை சகித்துக்கொள்ள முடியாதவனின் கிளர்ச்சி மேலாதிக்கத்தை தரைமட்டமாக்கும், 
அப்படி மண்டியிட்ட மேலாதிக்கத்தின் ஆற்றாமை தான் வரலாற்று திரிபு. 
ஒரு விடுதலை போராட்டத்தை தவறாக பதிவு செய்தலில் அற்பசுகம் மட்டும் அடங்கிவிடுவதில்லை, 

வரலாறு ஆயுதமாய் மாறும் என்று உணர்ந்து அந்த ஆயுதத்தை மழுங்க செய்யும் வேலை அது.

வீரப்பன் காலத்தில் இருந்த ஆட்டு மந்தை கூட்டம் வீரப்பனை பயங்கரவாதியாக மட்டுமே பார்த்திருக்கும். அந்த வீரப்பனின் நிபந்தனைகளை கூட அறிந்திருக்க மாட்டார்கள் அவர்கள். சட்டம் இருக்கிறது நீதிமன்றம் இருக்கிறது அரசாங்கம் இருக்கிறது என்றெல்லாம் வாய்விரித்திருக்கும் அந்த கூட்டம். 

"அட ஆட்டு மந்தை கூட்டமே, 
உன் சட்டத்தை நீதிமன்றத்தை அரசாங்கத்தை வைத்து காவிரியை மீட்க முடிந்ததா? 

இல்லை தானே??
இன்றும் வீரப்பனுக்கான தேவை உள்ளது தானே???
அப்படியானால் வீரப்பன் யாருக்கு வில்லன்????
அந்த மேலாதிக்க இனவாத்திற்கு வில்லன்!!! 
அதே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வில்லாதி வில்லன்களாவோம்... "
என்று வீர முழக்கமிட வாய்புள்ளதால் 'வில்லாதி வில்லன் வீரப்பன்' என்று படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

என்னது 700 கோடியா ?


தேர்தலில் அதிமுக-விடமிருந்து விஜயகாந்த் 700 கோடி வாங்கினார்.......

சந்திரக்குமார் குற்றச்சாட்டு

என்னய்யா இது ஒரு சதவிகிதம் வாக்கு வங்கி வச்சிருக்குற ஆளுக்கு 1500 கோடி. 

ஐந்து சதவிகிதம் வச்சு இருந்தவருக்கு வெறும் 700 கோடியா ?